Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 9, 2020

பூண்டை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம் உங்களை நெருங்கவே நெருங்காது!!


பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது. சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.

பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

அதிலும் அந்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

பூண்டின் மருத்து குணங்களை பற்றி இப்போது பார்ப்போம்

பூண்டை எப்படி பயன்படுத்த வேண்டும்?

ஒரு டம்ளர் பாலுக்கு 10 பூண்டு பல்லை சேர்த்து, பாலில் சிறிது நேரம் பூண்டை வேகவைத்து, சாப்பிட வேண்டும்.

பூண்டின் மருத்துவ குணம் பாலில் இறங்கியதும், அந்த பால் கசக்கும். அதனால் பாலில் உள்ள பூண்டுகளை தனியே எடுத்து சாப்பிடலாம் அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.

பூண்டு சேர்த்த பாலில் இனிப்பு சுவைக்காக சிறிதளவு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பனங்கற்கண்டு தரமானதாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய பனை வெல்லத்தை பூண்டு பாலில் சேர்த்து சாப்பிடலாம்.

பூண்டு வேகவைத்த பாலை தினமும் இரவில் குடித்து வந்தால், ரத்த அழுத்தம், மன அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் சரியாகும்.

No comments:

Post a Comment