Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 9, 2020

சுத்திகரித்த நீரை அதிகம் குடித்தால் உடலில் உப்பின் அளவு அதிகரிக்கும்!


உப்பு… அன்றாட உணவில் நாம் அனைவரும் சேர்த்துக் கொள்ளும் ஒரு முக்கியச் சுவை. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்ற பழமொழி உருவாவதற்கு உப்பின் சுவையே காரணம். பிரியாணியோ அல்லது கமகமக்கும் எந்த உணவாக இருந்தாலும் அதில் உப்பு சேர்க்காவிட்டால் சுவைக்காது. ஆனாலும் அளவோடு சேர்க்க வேண்டும்.

உப்பின் வகைகள்:

இன்றைக்கு உப்பு விஷயத்தில் நிறைய விழிப்புணர்வு வந்துவிட்டதால் அயோடின் சேர்த்த உப்பு, அயோடின் சேர்க்காத உப்பு, கல் உப்பு, தூள் உப்பு, இந்துப்பு என பல உப்புகளை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். எந்த உப்பாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் ஆபத்தே. இதுபற்றி சர்க்கரை நோய் நிபுணர் சங்குமணி சொல்வதைக் கேட்போம்.

“ அன்றாடம் ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்குத் தேவையான சோடியத்தின் அளவு 2.3 கிராம். இது ஒரு டீஸ்பூன் ஆகும். இதற்கு மேல் உப்பு சேர்த்தால் பாதிப்புகள் வரலாம். பதப்படுத்திய உணவுகளிலும், ஊறுகாய், கருவாடு, அப்பளம், வடகம், சூப் போன்றவற்றில் உப்புச் சத்து அதிகம் இருக்கும் என்பதால் கவனம் தேவை.

சிறுநீரகச் செயல்பாடு:

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் கால்சியத்தை அகற்றிவிட்டு சோடியத்தைச் சேர்க்கின்றனர். இதனால் நாம் நீர் அருந்தும்போது நம் உடலில் மறைமுகமாக உப்பு சேர்கிறது. அதேபோல் பன், ரொட்டி போன்றவற்றில் சோடியம் பை கார்பனேட் சேர்க்கிறார்கள்.
இதனால்தான் பலர் உப்பு சேர்க்கப்படாத ரொட்டி, பிஸ்கட்டுகளை கேட்டு வாங்குவார்கள்.

மனிதனின் உடல் உறுப்புகளில் முக்கியமானது சிறுநீரகம். வயது அதிகரிக்க அதிகரிக்க அதன் செயல்திறன் குறையும். 80 வயதாகும்போது சிறுநீரகத்தின் செயல்பாடு மிகவும் குறைவாகவே இருக்கும். இந்தச் சூழலில் உப்பு அதிகம் சேர்த்தால் அவை உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளை தூண்டிவிட்டு சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்றும் தன்மை குறைந்துவிடும். இதனால்தான் கால் மற்றும் உடலில் வீக்கம் ஏற்படும்.

பிரச்சினைகள்:

உப்பு தேவையான ஒன்றுதான் என்றாலும் அதிகரித்தால் ரத்த அழுத்தம் கூடி மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகக்கோளாறு ஏற்படலாம். அன்றாட உணவில் சேர்க்கும் உப்பின் அளவு அதிகரிக்கும்போது ரத்த நாளத்தின் உட்சுவரில் கொழுப்பு படிந்து செயல்திறன் குறைந்துவிடும்.

உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட சூழலில் உப்பு சேர்த்தால் கூடுதலாக கெடுதலை ஏற்படுத்தும். உப்பு அதிகமானால் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களைவிட ஆண்களே அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அதேநேரத்தில் உப்பைக் குறைத்தாலும் பிரச்சினை ஏற்படும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.


உப்புச் சத்து:

டீ குடிக்கும்போது கொஞ்சம் தூக்கலாக சர்க்கரை போடச் சொல்வதைப்போல உணவில் உப்பை கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண், இதயச் சுவரில் வீக்கம், சிறுநீரகக் கோளாறு, சிறுநீரகக் கல் ஏற்படும். ரத்தத்திலும் உப்பின் அளவு அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் எலும்பின் அடர்த்தி குறைந்துவிடும்.

சில நோய்கள் தாக்கும்போது உப்புச் சத்து அதிகரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையவும் வாய்ப்புகள் இருக்கின்றன. ரத்தத்தில் யூரியா மற்றும் யூரிக் ஆசிட் எனப்படும் அமிலச் சத்துகள் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு உப்பினை அளவோடு சேர்த்துக்கொள்வது நல்லது”.

No comments:

Post a Comment