சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த காலகட்டத்தில் அரசு செலவினை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் ரத்து செய்யப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பூதியம் திரும்பப் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Ok
ReplyDelete