Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 10, 2020

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள்; ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீட்டிப்பு


மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை செப்டம்பருக்கு ஒத்திவைத்து மத்திய அரசு அறிவித்துள்ளதை அடுத்து தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மார்ச் 25 முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, பதினொன்றாம் வகுப்பு வரை தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பிளஸ்டூ-வில் கடைசித்தேர்வு எழுதப்படவில்லை. அதே போன்று பல்கலைகழகத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் ஜூலை 26 அன்று நீட் நுழைவுத்தேர்வு என அறிவிக்கப்பட்டது. மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை எழுத அரசுப்பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

2000 அரசுப்பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து நீட் பயிற்சி பெற்று வந்தனர். ஜூலை 26 நுழைவுத்தேர்வு என்பதால் இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் பயிற்சி நிறைவு பெறுவதாக இருந்தது.

இந்நிலையில் ஜூலை 26-ஆம் தேதி நடைபெற இருந்த மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதையடுத்து, நீட் தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் நீட் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

நீட் தேர்வினை எழுதும் மாணவர்களுக்கு e-box என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் ஆன்-லைன் வழியில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது . இந்த மாதம் இரண்டாவது வாரம் வரை நடைபெற இருந்த பயிற்சி வகுப்புகள் , ஆகஸ்ட் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment