Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 22, 2020

ஆகஸ்ட் கடைசி வாரமா அல்லது செப்டம்பரா? பள்ளிகள் திறக்கும் விஷயத்தில் அரசின் முடிவு என்ன?: பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்ப்பு


சென்னை: கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ள நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து தமிழக அரசின் நிலை குறித்து அறிய பெற்றோர், மாணவர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். தாமதமாகுமா அல்லது ஆகஸ்டில் திறக்கப்படுமா என்பது தெரியவில்லை. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஜூலை மாதம் இறுதி வரை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளிகள் அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. தற்போது பள்ளிகள் திறக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு வந்துள்ளது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை என்சிஇஆர்டி வெளியிட்டுள்ளது. அதை அடிப்படையாக கொண்டு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் சார்பில், பள்ளிகளை திறப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு அனுப்ப வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்று பெற்றோரிடம் கருத்துகளை பெற வேண்டும். பள்ளிகளிடம் இருந்து பெற்றோர் என்ன எதிர்பார்க்கின்றனர், எப்போது பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.

இது குறித்து பெற்றோரின் கருத்துகளை 20ம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் தமிழக மற்றும் சென்னை கொரோனா நிலவரம் குறித்து விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் பள்ளிகளை திறக்கலாம்.அதுவும் கொரோனா நிலைமையை பொறுத்து மாறலாம் என்று தெரிவித்துள்ளது. அப்படி தெரிவித்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. முன்னதாக, பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அதன் ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழு இது குறித்து ஆய்வு செய்து கடந்த 14ம் தேதி தமிழக முதல்வரிடம் தனது பரிந்துரையை கொடுத்துள்ளது.

பரிந்துரையில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. அதனால் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு அறிவிக்குமா என்று பொதுமக்கள், மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாலும், சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் பள்ளிகள் திறப்பு விஷத்தில் தமிழக அரசு எச்சரிக்கையுடன் இருக்கும். அது 30 முதல் 60 நாள் வரை நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment