Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, July 27, 2020

கல்லுாரி மாணவர்களுக்கான அரியர்ஸ் தேர்வுகள் விரைவில் அறிவிப்பு!


கல்லுாரி மாணவர்களுக்கான 'செமஸ்டர்' தேர்வு ரத்து செய்யப்பட்டாலும், ஏற்கனவே உள்ள அரியர்ஸ் தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லுாரி, பல்கலைகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட வில்லை. ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

கலை, அறிவியல் கல்லுாரிகள், இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கான இறுதியாண்டு கடைசி செமஸ்டர் தேர்வுகளை, செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இறுதியாண்டு தவிர, மற்ற மாணவர்களுக்கு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த பருவ தேர்வு அல்லாமல், இதற்கு முந்தைய தேர்வுகளில், மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் வைத்துள்ள 'அரியர்' தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என, மாணவர்கள் எதிர்பார்த்தனர்.

இது குறித்து, உயர்கல்வி துறை அதிகாரிகள் கூறுகையில் 'நடப்பு செமஸ்டர் தேர்வுகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன.

'அரியர்ஸ் தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். ரத்தானதேர்வுகளுக்கான மதிப்பெண் முறையும், பிறகு அறிவிக்கப்படும்' என்றனர்.

No comments:

Post a Comment