Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, July 12, 2020

கர்நாடகாவில் கல்லூரிகளுக்கான தேர்வுகள் ரத்து


கர்நாடகாவில் இளங்கலை, முதுகலை உள்ளிட்ட கல்லூரிகளுக்கானத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் கல்வி நிறுவனங்கள் முழுவதும் திறக்கப்பட முடியாத நிலையில் உள்ளது. மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் தேர்வுகள் எதுவும் நடத்தப்பட முடியாத சூழல் உள்ளது. தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். ஆனால், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை.

தேர்வுகள் நடத்தப்படுவதில் குழப்பம் நீடித்துவருகிறது. இந்தநிலையில், கர்நாடகாவில் இளங்கலை, முதுகலை, பாலிடெக்னிக், பொறியியல் ஆகிய படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்குத் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை. அவர்களுக்கு செப்டம்பர் மாதம் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-21-ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ, பொறியியல், வேளாண் பொது நுழைவுத்தேர்வு ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும். கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை ஆகஸ்டில் தொடங்கும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

முன்னதாக, டெல்லியிலும் கல்லூரி மாணவர்களுக்கானத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment