Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, July 26, 2020

முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!


முந்திரி பருப்பை உட்கொள்வது மனச்சோர்வை போக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? முந்திரியில் வைட்டமின் பி 12 நிறைந்திருக்கிறது. இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் முந்திரி பருப்பில் காணப்படும் மெக்னீசியம் உடலில் செரோடோனின் ஹார்மோன் அளவை அதிகரிக்க உதவுகிறது.

மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு செரோடோனின் பங்களிப்பு முக்கியமானது. இதுதவிர முந்திரி பருப்பில் இருக்கும் புரதம், தாமிரம் போன்றவை நொதிகளின் செயல்பாடு, ஹார்மோன் உற்பத்தி, மூளையின் செயல்பாடு போன்றவற்றிலும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

முந்திரி பருப்பில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பும் உள்ளது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். முந்திரியை அரைத்து சருமத்தில் தடவினால் முகம் அழகாகவும் மென்மையாகவும் இருக்கும். முடி உதிர்தல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் முந்திரி பருப்பை சாப்பிட்டு வரலாம்.

மேலும் முந்திரியில் பொட்டாசியம், வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் துத்தநாகம் போன்றவையும் உள்ளன. அவை உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும், புற்றுநோயைத் தடுப்பதிலும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

குழந்தை பருவத்தில் மனச்சோர்வு அடைபவர்கள் உடல் பருமன், சுறுசுறுப்பின்மை, செயலற்ற தன்மை போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இளமை பருவத்தில் இதய நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும் என்பது அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகம் நடத் திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

முதுமை ஒரு நபரின் மனத்திறன், ஆளுமை மற்றும் நடத்தை ஆகியவற்றை பாதிக்கிறது. மனச்சோர்வு உள்ளவர்களுக்கு முதுமையில் டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி இரு மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

ஒரு நபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் சராசரி மனிதரை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மனச்சோர்வுடன் வாழ்பவர்களுக்கு காது கேளாமை பிரச்சினை உண்டாகுவதற்கான வாய்ப்பும் அதிகம். ஆண்களை விட பெண் கள்தான் அதிக பாதிப்புக்குள்ளாவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் இத்தகைய பிரச்சினைகளில் இருந்து ஓரளவு தப்பித்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment