Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 17, 2020

வெறும்வயிற்றில் வெந்நீர் அருந்துவதில்...இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா?


காலையில் தண்ணீர் அருந்தும் பலர் பொதுவாக வெந்நீர் அருந்துவது கிடையாது. ஆனால் வெறும்வயிற்றில் வெந்நீர் அருந்துவதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. குளிர் காலமானாலும் சரி, கோடை காலமானாலும் சரி, தினமும் காலை எழுந்து ஒரு டம்ளர் வெந்நீரைக் குடித்து வருவதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது.

அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடி நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும். அடிக்கடி காபி, டீ குடிப்பவர்கள் அதற்கு மாற்றாக சுடு தண்ணீரில் சுக்கு கலந்து குடிப்பது சிறந்தது. இதன் மூலம் வாயு தொல்லையில் இருந்து விடுபட முடியும்.


அளவுக்கு அதிகமாக உணவு, எண்ணெய் பலகாரம், இனிப்பு, போன்றவை சாப்பிட்டால் சில நேரங்களில் நெஞ்சு கரிக்க தொடங்கும். அப்போது ஒரு டம்ளர் வெந்நீரை எடுத்து பருகினால் கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும், உணவும் செரித்து விடும்.

தினமும் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் பருகினால் மலச்சிக்கல் தீரும். இரவு தூங்குவதற்கு முன் பருகினால் புளித்த ஏப்பம், வாயுப்பிடிப்பு ஆகியவை நீங்கிவிடும். வெந்நீர் பருகுவதால் உடலில் ரத்தஓட்டம் சீராகும். இதன் மூலம் நரம்பு மண்டலங்களின் செயல்பாடு மேம்படும். மேலும், வெந்நீர் அருந்துவது மூலம் உடலில் நச்சுகள் வெளியேறுவதால் வயதின் காரணமாக ஏற்படும் முதிர்ச்சி தள்ளிப்போடப்படும்.

உடல் எடையை குறைக்கு நினைப்போர் தினமும் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வர, நாளடைவில் எடை குறைந்து கொண்டே வரும்.

No comments:

Post a Comment