Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 17, 2020

இரண்டாம் வகை நீரழிவு நோய் வரக்கூடாதுன்னு நினைத்தால் இதனை முதல்ல சாப்பிடுங்க!!!


இரண்டாம் வகை நீரிழிவு நோயை உருவாகும் அபாயத்தை குறைக்க உதவும் உணவுகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். பழங்கள் மற்றும் காய்கறிகளில் வகை 2 நீரிழிவு நோயை 50 சதவிகிதம் குறைக்க உதவும் சத்துக்கள் அதிகமாக உள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. வகை 2 நீரிழிவு, பொதுவாக முதிர்வயதில் உருவாகிறது. உங்கள் உடலில் சர்க்கரையை சரியாக ஜீரணிக்க முடியாதபோது இந்த நோய் ஏற்படுகிறது.

அதிகப்படியான இரத்த சர்க்கரையானது சிறுநீரகம், நரம்பு மற்றும் கண் ஆகியவற்றை சேதப்படுத்தும். மேலும் இதய நோய் மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் மருந்து அல்லது இன்சுலின் வகை 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த அல்லது தடுக்க உதவும். புரதம், ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பை சரியான முறையில் சமநிலைப்படுத்துவது உங்கள் இரத்த சர்க்கரையை அதிகமாக்காமல் நீண்ட நேரம் இருக்கவும், அதிகப்படியான உணவு உட்கொள்வதை தடுக்கவும் உதவும் என்று உணவு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நீங்கள் டைப் 2 நீரிழிவு நோயைத் உங்களிடம் நெருங்காமல் பார்த்து கொள்ள விரும்பினால், உங்கள் உணவில் அதிக பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானிய உணவுகள் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் உள்ள உணவானது, வகை 2 நீரிழிவு நோயை 50 சதவிகிதம் குறைக்க உதவும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

22,000 க்கும் அதிகமானவர்களை உள்ளடக்கிய இந்த ஆய்வில், வைட்டமின் C மற்றும் கரோட்டினாய்டுகளின் உயர் இரத்த செறிவுகளுக்கு இடையேயான தொடர்பு வகை 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. வைட்டமின் C மற்றும் கரோட்டினாய்டுகள் பழம் மற்றும் காய்கறிகளில் அதிகப்படியாக உள்ளன. மற்றொரு ஆய்வு முழு தானிய உணவுகளை வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை (29 சதவீதம்) குறைத்தது என கூறுகிறது. இந்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், வகை 2 நீரிழிவு நோய்க்கான உங்கள் ஆபத்தை குறைக்க உதவும் உணவுகளின் பட்டியலை இங்கே காணலாம்:

1. கேரட்:

கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ள காய்கறிகளில் இதுவும் ஒன்றாகும். இது டைப் 2 நீரிழிவு நோய்க்கான குறைந்த ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்காக குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) மதிப்பெண் கொண்ட கேரட் போன்ற காய்கறிகளையும் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். கேரட்டில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை மலச்சிக்கலைக் குறைக்கவும், "கெட்ட" கொழுப்பைக் குறைக்கவும், எடையை குறைக்கவும் உதவும்.

2. தக்காளி:

தக்காளியில் ஆல்பா- மற்றும் பீட்டா கரோட்டின், லுடீன் மற்றும் லைகோபன் போன்ற முக்கிய கரோட்டினாய்டுகள் உள்ளன. அவை பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். ஒவ்வொரு நாளும் 200 கிராம் தக்காளியை உட்கொள்வதால் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் குறைந்தது என 2011 ஆம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

3. ஓட்ஸ்:

ஓட்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடலில் உள்ள சர்க்கரைகளின் முறிவைக் குறைக்கவும், இரத்த சர்க்கரையை சீராக்கவும் உதவும். ஓட்ஸ் சாப்பிடுவது இதய நோய்க்கான ஆபத்தையும் குறைக்கும்.

4. கீரை:

கீரை போன்ற பச்சை இலை காய்கறிகள் நார்ச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் A ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இவற்றை குறைந்த அளவு கலோரிகளே உள்ளன. இது எடை இழப்புக்கு உதவும்.

5. ப்ளூ பெர்ரி:
அதிக ப்ளூ பெர்ரி சாப்பிடுவோருக்கு நீரிழிவு நோய் குறைவு என்று ஆராய்ச்சி காட்டுகிறது. திராட்சை, ஆப்பிள், பேரிக்காய், பீச், பிளம்ஸ் போன்ற பழங்களையும் நீங்கள் சேர்க்கலாம். அவை நார்ச்சத்து, வைட்டமின்கள் A மற்றும் C, பொட்டாசியம் மற்றும் எண்ணற்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவை. இவை அனைத்தும் நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவும்.

No comments:

Post a Comment