Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, July 26, 2020

ரத்து செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் மதிப்பெண் கணக்கீடு - உயர்கல்வித் துறை விளக்கம்.




கல்லூரிகளில் பயிலும் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு மதிப்பெண் வழங்குதல், கணக்கீடு செய்வது எப்படி என்று உயர்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு பயின்ற மாணவர்களை தவிர்த்து, மற்ற மாணவர்களுக்கான தேர்வுகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வில் மதிப்பெண் வழங்குவது எப்படி என்று உயர்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) அறிவுறுத்தலின்படி, மாணவர்களுக்கு முந்தைய ஆண்டு பருவத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50 சதவிகிதமும், இந்த ஆண்டில் அக மதிப்பீட்டின்படி(Internal evaluation Marks) பெற்ற மதிப்பெண்களில் 50 சதவிகிதமும் சேர்த்து மொத்த மதிப்பெண் என்ன என்பது கணக்கிடப்படும்.

மேலும், இறுதியாண்டில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு முழுவதும் நடப்பு ஆண்டில் பெற்ற அகமதிப்பீட்டின்படியே மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.

இந்த மதிப்பெண் கணக்கீட்டு முடிவுகளில் திருப்தி அளிக்காத மாணவர்கள், தொற்று நிலைமை சீரான பின்பு நடத்தப்படும் சிறப்பு தேர்வுகளில் பங்கேற்று மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளலாம். அதேபோல், அரியர் வைத்த மாணவர்கள் கட்டாயம் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். அரியர் தேர்வு கடைசி வாய்ப்பாக இருக்கும் எனில் அந்த மாணவர்களுக்கு மட்டும் மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment: