Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 10, 2020

காய்ச்சல், சளி, தூக்கமின்மை போக்கும் தேனில் ஊறவைத்த வெங்காயம்



தேனில் வெங்காயத்தை ஊறவைத்து, அதன் மூலம் எடுக்கப்படும் சிரப் குடிப்பதால், உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.வெங்காயம் ஒரு சிறந்த உணவு. இதை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பல மடங்கு அதிகரிக்கும். உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது, தட்டில் இருந்து ஒதுக்காமல், அதை நன்குமென்று சாப்பிட வேண்டும்.

நேற்று, இன்று இல்லை, பண்டைய காலம் முதலே மருத்துவத்திற்கு பயன்படுத்தி வரப்படும் சிறந்த உணவு தேன். உடல் ஆரோக்கியம், அழகு என பலவற்றுக்கு தேன் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.மேலும் வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. முடி கொட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது.

தேன் மற்றும் வெங்காயம் இந்த இரண்டு மருத்துவகுணங்கள் கொண்டதையும், வைத்து பெறும் நன்மைகளை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
வெங்காயம் - அரை கிலோ , தேன் - அரை லிட்டர்

செய்முறை

மெல்லியதாக வெங்காயத்தை நறுக்கி கொள்ளுங்கள். சிறிய சைஸ் வெங்காயமாக இருந்தால் அப்படியே முழுசாகவும் பயன்படுத்தலாம்.ஒவ்வொரு வெங்காய ஸ்லைஸின் நடுவிலும் தேன் தெளித்து, ஒன்றின் மீது ஒன்றாக அடுக்குங்கள்.ஒரு பவுல் / கப்-ல் தேனோடு ஊறவைத்த இந்த வெங்காயத்தை 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.மறுநாள் பௌலில் சேர்ந்திருக்கும் நீர்மம் போன்ற அந்த சிரப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

காய்ச்சலை போக்கும்.தூக்கமின்மை கோளாறை சரி செய்யும்.
சளி தொல்லை நீங்கும்.கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.நீரிழிவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும்இரத்த ஓட்டத்தை சீராக்கும், இரத்தத்தை சுத்தமாக்கும். செரிமானத்தை ஊக்கவிக்கும்.உடலில் உள்ள நச்சுக்களை அழிக்க உதவுகிறது.

ஆன்டி- பாக்டீரியல் தன்மை கொண்டது. மேலும், இந்த வெங்காயம் - தேன் சிரப்பில் வைட்டமின் A, B, B2, B3, B5, C, E மற்றும் J சத்துக்கள் உள்ளன.இருமலுக்கு இது ஒரு சிறந்த வீட்டு மருந்தாகும். இருமல் தொல்லை இருப்பவர்கள், இந்த சுரப்பை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டால் நல்ல தீர்வுக் காணலாம்.

சளித்தொல்லை முதல் கட்டத்திலேயே இந்த வெங்காயம் மற்றும் தேன் சிரப்பை அரைவாசி அல்லது ஒரு டீஸ்பூன் அளவு உட்கொண்டு வரவும். ஒரு நாளுக்கு 3 - 4 முறை எடுத்துக் கொண்டால் விரைவாக சளித்தொல்லையில் இருந்து தீர்வுக் காண முடியும்.

இந்த சிரப்பை ஓரிரு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை ஃபிர்ட்ஜில் வைத்து பயன்படுத்தி வரலாம். மேலும் இதன் தயாரிப்பு முறை மிக எளிதானது என்பதால் தேவைக்கு ஏற்ப சரியான அளவு செய்து வைத்துக் கொள்வது சிறந்தது

மற்ற காய்ச்சல், சளி மருந்துகளை போன்று இது கசப்பானது அல்ல. தேன் இந்த சிரப்பின் சுவையை சீராக வைத்துக் கொள்வதால், சிறு குழந்தைகள் கூட விரும்பு சாப்பிடுவார்கள். மேலும், ஆரோக்கியம் மேம்படும், காய்ச்சல் சளி விரைவில் குணமாகும்.

குறிப்பு
ஒருவேளை ஒரு இரவு முழுதும் காத்திருக்க முடியாது, அவசரமாக தேவை என்றால், இளங்கொதி நிலையில் 5 - 10 நிமிடங்கள் சூடு செய்து, அதை ஆறவைத்து, உறங்க செல்லும் முன் குடிக்கலாம். காலையில் சற்று ரிலாக்ஸாக உணர இது உதவும்.

No comments:

Post a Comment