Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 10, 2020

9 முதல் 12ம் வகுப்பு வரை. 30 சதவிகித பாடங்களைக் குறைக்க தமிழக அரசு முடிவு?

கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்பட முடியாத நிலையில் 9 முதல 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 30 சதவிகிதம் வரை பாடங்களைக் குறைப்பது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பற்றிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு அது போன்ற ஏற்பாடை செய்ய அரசு தற்போதுதான் யோசித்து வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்த செங்கோட்டையன் தொலைக்காட்சி மூலமாக பாடம் நடத்தப்படும் என்றார்.

இந்த நிலையில் பள்ளி பாடங்களைக் குறைக்க தமிழக அரசு குழு அமைத்திருந்தது. அந்த குழு தமிழக அரசுக்கு 30 சதவிகித பாடங்களைக் குறைக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. 30சதவிகித குறைப்பை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் எந்த எந்த பாடத்தில், எதை எல்லாம் நீக்கலாம் என்று விரிவான அறிக்கையை அந்த குழு விரைவில் வழங்கும் என்று தெரிகிறது.


சமீபத்தில் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்திலும் இப்படி பாடங்கள் குறைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழக அரசு விரைவில் பாடங்களின் அளவைக் குறைத்து அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிளஸ் 2 தேர்வில் கடைசித் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்துவது, பிளஸ் 2 முடிவுகளை வெளியிடுவது, 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு என்று பல்வேறு சிக்கலான வேலைகளில் பள்ளிக் கல்வித்துறை, தேர்வுத் துறை இயக்ககம் செயல்பட்டு வருவதால், அரசு அறிவிப்பில் தாமதம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment