Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 1, 2020

IFHRMS மூலம் ஜூலை மாத ஊதியப் பட்டியல் தயார் செய்து கருவூலகங்களில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளிக் கல்வி - பெரம்பலூர், நாமக்கல், தருமபுரி, திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் IFHRMS மூலம் ஜூலை மாத ஊதியப் பட்டியல் தயார் செய்து கருவூலகங்களில் சமர்ப்பித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


பள்ளிக் கல்வித்துறையின் கீழுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் / பள்ளிகளிலும் IFHRMS மூலம் சம்பளம் மற்றும் இதர பட்டியல்கள் கருவூலத்திற்கு சமர்ப்பிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. மதுரை , திருநெல்வேலி , திருவாரூர் , ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஜுன் 2020 மாத சம்பள பட்டியல் IFHRMS மூலம் கருவூலகங்களில் சமர்ப்பிக்கப்பட்டது. பெரம்பலூர் , நாமக்கல் , தருமபுரி , திண்டுகல் , தூத்துகுடி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இம்மாதம் இப்பணியினை முடிக்க கருவூலகத்துறை திட்டமிடப்பட்டுள்ளது எனவே மேற்கண்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் / அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியார்களின் விவரங்களை IFHRMS மென்பொருளில் பதிவு செய்து , ஜுலை 2020 மாத ஊதிய பட்டியலை IFHRMS மூலம் கருவூலகங்களுக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவ்வாறு சமர்ப்பித்தப்பிறகு அவ்விவரங்களை இணைக்கப்பட்ட படிவத்தில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . இவற்றில் ஏதேனும் ஐயப்பாடுகள் இருப்பின் சார்ந்த கருவூலகத்தினை தொடர்பு கொண்டு அவற்றை நிவர்த்தி செய்து நிலுவை ஏதுமின்றி சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகங்களின் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் ( DDO ) உரிய பணியினை முடிக்க அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News