Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 29, 2020

TET - தகுதித் தேர்வு சான்றிதழுக்கான காலத்தை நீட்டித்து,படிப்படியாக வேலை வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் - த.மா.க.கோரிக்கை:


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.ஜி.கே.வாசன்.எம்.பி அவர்கள் விடுக்கும் அறிக்கை:

"2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு சான்றிதழுக்கான காலத்தை நீட்டித்து,படிப்படியாக வேலை வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் " த.மா.க.கோரிக்கை:

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 80,000 பேர்கள்,கடந்த ஆறரை ஆண்டுகளாக அரசுப் பணிக்காக காத்திருக்கிறார்கள்.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன.சாதாரணமாக தேர்வில் தேர்ச்சி என்பது எக்காலத்திற்கும் பொருந்தும்.ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் 2013 ஆம் ஆண்டு தேர்வு பெற்றவர்களுக்கான சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். தற்போது தேர்வு நடைபெற்று ஆறரை ஆண்டுகள் ஆகியும் பணி வழங்கப்படவில்லை.இன்னும் சில மாதங்களில் தகுதிச் சான்றிதழ் காலாவதியாகும் நிலையில் இருக்கின்றன.

மத்திய மற்றும் மாநில பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்விற்கு வழங்கப்படக்கூடிய தகுதிச் சான்றிதழ், ஆயுட்காலச் சான்றிதழாக இருக்கின்றது.அதே போல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு காலகட்டத்தை மீட்க முடியுமா?அல்லது நீட்டிக்க முடியுமா? என்று அரசு பரிசீலித்து ஓர் நல்ல முடிவை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ,வேலை கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்களுக்கு தற்போதைய பாடத்திட்டம் தெரியாது என்று அரசு கருதுமேயானால் அவர்களுக்கு பணி ஆணை வழங்கிய பிறகு,ஒரு குறுகிய கால மறு பயிற்சியை,தற்கால பாடத்திட்டத்தின் படி பயிற்சி வகுப்புகள் நடத்தி அவர்களை பணி செய்ய அனுமதிக்கலாம்.இவற்றை பள்ளிக்கல்வித்துறையும் பரிசீலனை செய்ய வேண்டும்.

ஆகவே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு மற்றும் பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்களுக்கு தகுதிதேர்வு சான்றிதழுக்கான காலத்தை மறுபரிசீலனை செய்து நீட்டித்தும் படிப்படியாக வேலைவாய்ப்பை வழங்கியும் அவர்களது வாழ்வில் ஔிதீபம் ஏற்ற வேண்டும் என்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களையும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்..

- ஜி.கே.வாசன்.

No comments:

Post a Comment