Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 1, 2020

நாளைய(02.08.2020 ) நாள் எப்படி இருக்கும்.?




02-08-2020, ஆடி 18, ஞாயிற்றுக்கிழமை.

இராகு காலம் - மாலை 04.30 - 06.00

எம கண்டம் - பகல் 12.00 - 01.30

குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30.

நாளைய ராசிப்பலன் - 02.08.2020.

மேஷம்

உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன்கள் உண்டாகும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும் நிதானமாக செயல்பட்டால் தொழிலில் உள்ள சிக்கல்கள் நீங்கும். தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் ஒருசில பாதிப்புகள் உண்டாகலாம்.

மிதுனம்

மற்றவர்கள் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

கடகம்

ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள்/ வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

சிம்மம்

உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பிற மொழியை சேர்ந்தவர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சற்று பலவீனமாக காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறிய தொகையை செலவிட நேரிடலாம்.

கன்னி

எதிலும் நிதானம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டு.

துலாம்

செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வியாபாரம் தொடர்பாக இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும். பயணங்களால் அனுகூலம் உண்டு. பெண்கள் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

விருச்சிகம்

மனைவிவழி உறவினர்களால் அனுகூலப் பலன் உண்டு. ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மன அமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும். நினைத்த காரியம் நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

தனுசு

எடுத்த காரியம் வெற்றி பெற உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளால் அனுகூலம் உண்டு. உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். செயல்களில் தாமதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

மகரம்

வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். தெய்வ வழிபாடு நல்லது. வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல்நிலையில் சற்று மந்தநிலை ஏற்படும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

கும்பம்

பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும். சுப செலவுகள் உண்டாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டு. ஆரோக்கிய பாதிப்புகள் சீராகும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும்.

மீனம்

பணவரவு சிறப்பாக அமையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் நண்பர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

No comments:

Post a Comment