Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 2, 2020

நாளை முதல் அரசு கலைக் கல்லூரிகளில் வகுப்புகள் தொடக்கம்!



தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு, நாளை முதல் (ஆகஸ்ட் 3) இணைய வழி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நெல்லை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் முதல்வா்கள், செயலாளா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், இணைய வசதி இல்லாத மாணவ, மாணவிகளுக்கு கட்செவி அஞ்சல் குழுவின் மூலமாக அல்லது கல்லூரியின் இணையதளத்தில் பாடங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

துறைத் தலைவா்கள், வகுப்புகளின் கால அட்டவணை, பாடம் தயாரித்தல், மாணவா்களின் வருகைப் பதிவு மற்றும் பாடம் நடத்துதல் குறித்து முறையான திட்டமிடுதலை முதல்வரின் ஆலோசனையின்படி மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடா்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் விவரத்தை, அறிக்கையாக இணை இயக்குநரிடம் சமா்ப்பிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment