Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 16, 2020

1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்புவரை நாளை முதல் துவங்குகிறது மாணவர் சேர்க்கை..

அரசு ,அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நாளை முதல் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையினை துவக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனோ பரவல் காரணமாக வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தள்ளிப்போனது. இந்நிலையில் அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதுடன் மாணவர் சேர்க்கையின் போது மேற்கொள்ளவேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது.

அதன்படி நாளை 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலும், வரும் 24-ஆம் தேதி 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையும் துவங்குகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளில் மாணவர்களுக்கான அரசு அறிவித்துள்ள இலவச பாடப்புத்தகங்கள், புத்தகப்பை, காலணிகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது மாணவர் சேர்க்கையின் போது கூட்டம் சேர்வதை தடுக்க 2 மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட வேண்டும். பள்ளி ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொரோனோ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களை பள்ளிக்கு அழைக்காமல் தொலைபேசி வாயிலாக மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment