Search This Blog

Friday, August 28, 2020

தமிழகத்தில், 10, 11, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு நடத்த அரசு அனுமதி!

0 comments

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று செய்தி வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ௧௦ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு செப்டம்பர் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்திருந்தது.தமிழக தேர்வுத் துறை

12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு செப்டம்பர் 21ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறும். 11ம் வகுப்புக்கான துணைத் தேர்வு செப்டம்பர் 29ம் தேதி தொடங்கி அக்டோபர் 7ம் தேதி வரையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு உள்ள நிலையில் இந்த தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

ஊரடங்கு ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அடுத்த மாதம் நீட்டிக்கப்படுமா, தேர்வுகள் நடத்த அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. நீட், ஜெ.இ.இ தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், தனித்தேர்வு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று செய்தி வெளியாகி உள்ளது. இதனால் துணைத் தேர்வு கட்டாயம் நடக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment