Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 1, 2020

தாய்மொழி வழிக் கல்வியை 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும்




மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுமுறையை உறுதி செய்வதை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.

பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தாய்மொழி கல்வி 5-ம் வகுப்பு வரை கட்டாயம் என்ற அறிவிப்புக்கு வரவேற்கிறேன்.

இந்த வரையறையை 8-ம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும். ஒருங்கிணைந்த பி.எட். கல்வி, வெளிப்படையான ஆசிரியர்கள் நியமனம் போன்ற அறிவிப்புகளுக்கு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவத்துள்ளன. உடல் குறைபாடு உள்ள குழந்தைகள் உயர்கல்வி வரை முழுமையாக மேற்கொள்ள இது வழிவகுக்கும்.

அன்னை மொழியை காப்போம், அனைத்து மொழியினையும் கற்போம்" என்ற தேமுதிகவின் கொள்கையின்படி மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் தாய் வழிக்கல்வி திட்டத்தினை 8-ம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment