Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 28, 2020

23 அரியர் ஆல் கிளியர்... வேதனையில் இருந்த என்ஜினீயரிங் மாணவர் சாதனை !!


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. தமிகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாமல் போனது. இதனால் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர்.

ஆனால் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப்போன நிலையில் மாணவர்கள் எதிர்ப்பு அதிகரித்தது. மாணவர்கள் எதிர்பார்த்ததுபோலே கடந்த செமஸ்டர் தேர்வுகளில் ஆல்பாஸ் செய்ததோடு மட்டுமின்றி அரியர் வைத்திருந்த மாணவர்களையும் ஆல்பாஸ் செய்து அரசு அறிவித்தது.

இதனையடுத்து மாணவர்கள் பலர் மீம்ஸ் மூலமும், வீடியோ வெளியிட்டும் அரசுக்கும், முதலமைச்சருக்குகம் நன்றி தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில் திருச்சி தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3ஆம் ஆண்டு படித்து வந்த சஞ்சய் நேரு(23) என்ற மாணவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

முன்பெல்லாம் அரியர்களை தாங்கள் விரும்பும் நேரத்தில் எழுதிக்கொள்ளலாம். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. முதலாம் ஆண்டு அரியர்களை எழுதி தேர்ச்சி பெற்றால் தான் 4-ம் ஆண்டுக்கு அனுப்பி வைப்போம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதனால் வேறு வழியில்லாமல் 23 அரியர் பாடங்களுக்கும் கட்டணம் செலுத்தினேன்.

இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எனது அரியர்களை எல்லாம் பாஸ் செய்து அறிவித்துள்ளார். இது எல்லையில்லா மகிழ்ச்சியை அளித்துள்ளது. கொரோனாவுக்கு மிக்க நன்றி.

இந்த ஆல்பாஸ் முடிவு என்னை போன்ற மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்கள் வகுப்பில் 12 மாணவ -மாணவிகள் உள்ளனர். இவர்களில் ஒரு மாணவியை தவிர்த்து அனைவரும் அரியர் வைத்திருந்தோம். இப்போது அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டோம் என்றார்.

மேலும் பத்து மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றப்போதும் என்ஜினீயரிங் கல்லூரியில் தனக்கு எதுவும் புரியவில்லை எனவும் இதனால் மனப்பாடம் செய்து தவித்து வந்ததாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment