Subscribe Us

Monday, August 17, 2020

பிளஸ் 2 மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்கள் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் - தேதி அறிவிப்பு

12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு அரியர் எழுதிய மாணவர்கள் மறுமதிப்பீடு மற்றும் மறுக்கூட்டலுக்கு விண்னப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது .

விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்த பின்பு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி மாணவர்கள் இணையதளத்தில் www.tn.dge.gov.in என்கிற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 21-ஆம் தேதி முதல் 25 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அலுவலகத்தில் மாணவர்கள் சமர்பிக்க வேண்டும்.

மறு மதிப்பீட்டிற்கு அனைத்து பாடங்களுக்கும் 505 ரூபாயும், மறுகூட்டலுக்கு உயிரியியல் பாடத்திற்கு மட்டும் 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed