Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 30, 2020

50% ஆசிரியர்களை பள்ளிக்கு அழைக்கலாம். முக்கிய அறிவிப்பு..!!


செப்டம்பர் 21 க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த 50 சதவீத ஆசிரியர்கள், பணியாளர்களை பள்ளிக்கு அழைக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு 4ஆம் கட்ட தளர்வுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், செப்டம்பர் 30ஆம் தேதிவரை பொதுமுடக்கம் சில தளர்வுகளுடன் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. நான்காம் கட்ட பொது முடக்க தளர்வுகளில் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகள் 100 பேருடன் நடத்தலாம். செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி கலையரங்கம் திரையரங்குகள் செயல்படும். செப்டம்பர் 30 வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு தடை தொடரும் என்று அறிவித்துள்ளது..

மேலும் நோய்க்கட்டுப்பாடு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் உள்ள 9-12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், கல்வி தொடர்பான ஆலோசனைகளை பெற செப் 21 முதல் பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலை பெற்று சொந்த விருப்பத்தின் பேரில் ஆசிரியர்களை சந்திக்க பள்ளிக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. ஆனால் கட்டாயமல்ல.. அதேபோல செப்டம்பர் 21 க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த 50 சதவீத ஆசிரியர்கள், பணியாளர்களை பள்ளிக்கு அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment