Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 13, 2020

மாணவர்களுக்கு உதவுவதற்காக, நடமாடும் மினி நூலகம்


கொரோனா பாதிப்பால் கல்வி கற்க முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதற்காக, நடமாடும் மினி நூலகம் ஒன்றை சண்டிகரை சேர்ந்த ஒருவர் உருவாக்கியுள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக மாறியுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் வீடுகளில் செல்போன், தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், அவர்கள் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, சண்டிகரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் வித்தியாசமான மற்றும் பயனுள்ள ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன் நிறுவனர் சந்தீப் குமார் என்பவர் ஒரு மினிவேனில் ஏராளமான புத்தகங்களை வைத்துக் கொண்டு புறப்படுகிறார். கொரோனா பாதிப்பால் கல்வி கற்க முடியாத நிலையில் உள்ள குழந்தைகளுக்கு புத்தகங்கள் வழங்கி படிக்க உதவி செய்கிறார்.


இதற்காக பல்வேறு நபர்களிடம் இருந்து புத்தகங்களை சேகரித்து இந்த சிறிய நடமாடும் நூலகத்தை உருவாக்கியுள்ளார். கல்லூரி படிப்பை முடித்ததும், தனது புத்தகங்களை வீணாக்க விரும்பாத அவர், அதனை மற்றவர்களுக்கு கொடுக்க முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து தொண்டு நிறுவனம் மூலம் பலரிடம் இருந்து புத்தகங்களை சேகரித்து பள்ளிகளில் முகாம்கள் நடத்தி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வந்துள்ளார்.

தற்போது குடிசைப் பகுதிகளில் வசிக்கும் இயலாநிலை மாணவர்களை தேடிக் கண்டுபிடித்து புத்தகங்கள் வழங்கி வருகிறார். இதுமட்டுமல்லாமல் முகக்கவசம், நாப்கின் உள்ளிட்டவைகளையும் வழங்குகிறார். அவர் கடந்த நான்கு ஆண்டுகளில் 40,000 புத்தகங்களை சேகரித்துள்ளார். ஊரடங்கிற்கு பிறகு சுமார் 10,000 புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment