Subscribe Us

Wednesday, August 5, 2020

பள்ளிகளில் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!


பருவகாலங்களில் டெங்கு நோய் வருடந்தோறும் அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை,திருவள்ளுவர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வருகைதர துவங்கியுள்ளனர்.

இதனையொட்டி பள்ளி வளாகங்களில் உடைந்த ஓடுகள் ,பிளாஸ்டிக் குடுவைகள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி மேற்கூரைகளில் மழைநீர் தேங்காத வண்ணம் அடைப்புகளை சரி செய்ய வேண்டும்.

மண்டி கிடக்கும் புதர்களை அப்புறப்படுத்துதல், பள்ளி வளாகங்களில் எங்கும் நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், சுகாதாரத் துறையின் அறிவுரைகளை பின்பற்றி அளவுக்கு ஏற்ப குடிநீரில் குளோரின் கலக்க வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகளை பள்ளி முதல்வர்கள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. மேலும் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படலாம் என்கிற சூழ்நிலையில் இந்த உத்தரவை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed