Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 22, 2020

கொரோனா குறைந்தவுடன் இந்தாண்டு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது பற்றி முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

காலத்தின் தேவைக்கேற்ப பாடங்களை குறைப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன் கருதி தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு டிவி வாயிலாகவும் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஆன்லைன் வகுப்பால் மாணவர்களுக்கு பயனில்லை எனவும் மாணவர்களின் உடல்நலத்தில் குறைபாடுகள் ஏற்படும் எனவும் பல்வேறு கருத்துகள் எழுந்து வருகின்றன.

இதற்கிடையில், டிசம்பர் மாதம் வரையில் பள்ளிகள் திறக்கப்படாது என கூறப்படுகிறது. எனினும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி இருக்கும் நிலையில், கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தன குளத்தில் குடிமராமத்து பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கிவைத்த அவர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பணிகளை மேற்கொண்டதற்காக நற்சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்கை மற்றும் பள்ளி மாற்று சான்றிதழை வாங்க பணம் கேட்க கூடாது.

மாணவர்களிடம் எதற்காக பணம் வசூலித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரித்துள்ளார். மேலும் பேசிய அமைச்சர், காலத்தின் தேவைக்கேற்ப பாடங்களை குறைப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். அரசு பள்ளிகளில் இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். கல்வி தொலைக்காட்சியை பார்க்கும் மாணவர்களின் எண்ணிக்கையை வைத்து வருகைப் பதிவேடு கணக்கிட முடியும். கொரோனா குறைந்தவுடன் இந்தாண்டு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது பற்றி முடிவெடுக்கப்படும். 10 , 12 மட்டுமின்றி 8, 11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் மறுதேர்வு எழுத வாய்ப்பு தரப்பட்டுள்ளது, என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment