Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 14, 2020

பள்ளிகளில் அட்மிஷன் எப்படி? அரசாணை வெளியீடு


சென்னை: பள்ளிகளில் 1,6.9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், தற்போது பள்ளிகளில் 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர்களை சேர்க்கலாம் என்று கடந்த 11 ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். அதன்படி 17ம் தேதி முதல் சேர்க்கை தொடங்க உள்ளது.

அமைச்சரின் இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்காக பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர், அரசுக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளனர். மேற்கண்ட இயக்குநர்களின் கடிதங்களை பரிசீலித்த பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வி அமைச்சர் கடந்த 11ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் படி பள்ளிகளில் 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் ஆன்லைன் மூலம் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், தற்போது பள்ளிகளில் 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மாணவர்களை சேர்க்கலாம் என்று கடந்த 11 ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். அதன்படி 17ம் தேதி முதல் சேர்க்கை தொடங்க உள்ளது. அமைச்சரின் இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்காக பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர், அரசுக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளனர். 

மேற்கண்ட இயக்குநர்களின் கடிதங்களை பரிசீலித்த பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வி அமைச்சர் கடந்த 11ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் படி பள்ளிகளில் 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் ஆன்லைன் மூலம் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்.

No comments:

Post a Comment