Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 22, 2020

இதை சரிவர செய்தால் கொழுப்பு தானாவே குறைந்துவிடுமாம்!




நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கும். சீரக நீர் சுவாச கட்டமைப்புக்கும் நன்மை சேர்க்கும். சளியை குணப்படுத்தவும் உதவும்.

தினமும் காலையில் சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் பல நன்மைகளை பெறலாம். பல காலமாகவே நம்முடைய பாரம்பரிய மருந்துகளில் சீரகம் பயன்படுத்தப்படுகிறது.

சீரகத்தை தவறாமல் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஜீரகம் உங்கள் உடலில் உள்ள செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் உங்கள் செரிமானத்திற்கு உதவும்.

சீரகத்தை அப்படியே சாப்பிடுவதன் மூலமோ, அல்லது சீரகத் தண்ணீரை தினமும் குடிப்பதன் மூலமாகவோ உடலிலிருந்து கொழுப்பை குறைக்க முடியும்.

* சீரகத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஒரு டீஸ்பூன் ஜீரகத்தில் சுமார் 1.4 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கும். ஜீரகம் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதற்கும் உதவும்.

* ஜீரகம் உடலிலிருந்து கெட்ட கொழுப்பை அகற்ற பயன்படுகிறது. ஜீரகத்தை சாப்பிடுவது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

* ஜீரகம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும், எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. உடல் எடையை குறைப்பதற்கு சீரகத்தை தாராளமாக பயன்படுத்தலாம்.

* வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது.

* உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் சீரக நீரை குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

* அடிக்கடி சீரணக் கோளாறு இருந்தால் இனி வீட்டில் சாதாரணத் தண்ணீருக்குப் பதில் உணவருந்துகையில் இளஞ்சூட்டில் சீரகத்தண்ணீர் அருந்துங்கள்.

No comments:

Post a Comment