Breaking

Saturday, August 22, 2020

குழந்தைகள் காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் உபாதைகள்


காலையில் பள்ளி வேனை பற்றிய பயம் எல்லா பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இருந்து கொண்டிருக்கிறது. வேனை பிடிக்கும் அவசரத்தில் உணவை அள்ளி விழுங்கிவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். 

அல்லது 'பள்ளி வேன் வந்துவிட்டது' என்று கூறி, காலை உணவை தவிர்க்கிறார்கள். இதனால் பள்ளிக் குழந்தைகள் பெரும்பாலும் ஜீரணக்கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

கோதுமை மற்றும் கோதுமை உணவுகள், பால் மற்றும் பால் உணவுகளில் 'குளூட்டின்' என்ற புரதம் இருக்கிறது. இது ஜீரண பிரச்சினையை உருவாக்கும் புரதமாகும். இந்த புரதத்தால் உருவாகும் நோய் 'செலியாக்' எனப்படுகிறது.

இந்த நோய் தாக்கினால் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். மலம் வாடை வீசும். வயிறு வீங்கி, வலித்ததுபோல் இருக்கும். 

இந்த அறிகுறிகளை கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தைகளின் உடல்வளர்ச்சி தடைபடும். உடல் எடையும் குறையும். 

அஜீரணத்தால் ஏற்படும் பாதிப்புகளில் வயிற்றுப்போக்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment