அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, முழு நேர, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, விளையாட்டு புதிய விதிமுறைகள், பயிற்சிகள், போட்டிகள் குறித்து புத்தாக்க பயிற்சி கல்வியாண்டு துவங்கியதும் நடத்தப்படுகிறது.நடப்பாண்டில், இப்பயிற்சி, 'ஆன்லைன்' மூலம் வழங்கப்படுகிறது. மாவட்டம் வாரியாக பயிற்சிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளி, உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை 1 மற்றும் நிலை 2 உள்ளிட்டோருக்கான பயிற்சி, ஆக., 17 முதல், 22ம் தேதி வரை, மதியம், 12:00 முதல், 1:30 மணி வரை நடக்கிறது.
மாவட்டத்திலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி குறித்து அறிவிக்க வேண்டுமென திருப்பூர் மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.



No comments:
Post a Comment