"வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது" : தமிழக அரசு எச்சரிக்கை!


தமிழகம் முழுவதும் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடத்தப்போவதாக தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். 

அதுதொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஊழியர்களுக்கு நோ வொர்க் நோ பே என்ற அடிப்படையில் சம்பளப் பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel