Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 1, 2020

பான் கார்டு புதிதாக விண்ணப்பிக்க எளிய வழி என்ன தெரியுமா





இப்போதெல்லாம் நாட்டில் ஆதார் அடையாள அட்டைகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு பான் கார்டுகளும் மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாகும். இப்பொழுது நீங்கள் புதிய பான் அட்டைகளை விண்வபிப்பது என்பது மிகவும் எளிமையான ஒன்றாகிவிட்டது. ஏனென்றால் ,இப்பொழுது இந்த ஆவணங்களை நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் புதிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். 

இதில் புதிய பான் அட்டை விண்ணப்பிக்க முதலில் NDSL தளத்தை ஓபன் செய்யவும். பின்பு இந்திய குடிமக்களுக்கான புதிய பான் விண்ணப்ப வகையைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Individual என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். 

பின்னர் பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்கள் மொபைல் எண் போன்ற தேவையான எல்லாவித விவரங்களையும் பதிவு செய்து சமர்ப்பித்து விடவும். 

இதில் அடுத்தபடியாக திரையில் இருக்கும் Continue with the PAN Application Form என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதன் பிறகு உங்களுடைய டிஜிட்டல் e-KYC விபரங்களைச் சமர்ப்பிக்கவும். இந்த படிவத்தின் அடுத்த பகுதியில் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை உள்ளே பூர்த்தி செய்து கொள்ளவும் .

இந்த படிவத்தில் உள்ள AO வகை மற்றும் பிற விவரங்களை உள்ளிட்டு Proceed கிளிக் பண்ணி கொள்ளவும் . இதைத்தொடர்ந்து , ​​நெட்பேங்கிங் / டெபிட் / கிரெடிட் கார்டு மூலம் கட்டணத்தை செலுத்தி கொள்ளவும் .

No comments:

Post a Comment