Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 8, 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ? முதல்வர் பழனிசாமி விளக்கம்!



கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சேலத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் இருமொழி கல்விகொள்கை குறித்து பேசிய போது, “கல்வியைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை என்பது தமிழக அரசின் கொள்கை. கல்விக் கொள்கை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு அளிக்கும் பரிந்துரைக்கு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அப்போது தொடர்ந்து பேசிய முதல்வரிடம் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் திறக்கப்படும்” என உறுதிப்பட தெரிவித்தார்.


கொரோனா பரவல் முன்பை விட சற்று குறைந்து காணப்பட்டாலும் முற்றிலுமாக தொற்று பரவல் குறையவில்லை. இதனால் கல்வி நிறுவனங்கள் திறப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment