Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 15, 2020

பித்தம் தெடர்பான பிரச்சினைகளை எளிய முறையில் போக்க இதோ சில மருத்துவ குறிப்புகள்

பார்ப்பதற்கு கரும்பச்சை நிறத்தில் மஞ்சள் மற்றும் பழுப்பு நிற நீராக காட்சியளிப்பது தான் பித்தநீர்.

இது பொதுவாக கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நீர் தான் சிறுகுடலில் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.

நமது உடலில் உள்ள இறந்த இரத்த சிவப்பணுக்களையும், நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகிறது. இந்த பித்தநீர் கல்லீரலில் சுரக்கப்பட்டு பித்தபையில் சேகரிக்கப்படுகிறது.

பித்தம் அளவிற்கு அதிகமாக உடலில் இருக்கக் கூடாது. இவற்றில் அளவு மீறினால், நோய்கள் வரும்.

அந்தவகையில் பித்தத்தை போக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் பற்றி இங்கு பார்ப்போம்.

இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும். பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

No comments:

Post a Comment