Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 14, 2020

குங்குமம் வைப்பதால் உண்டாகும் சிறப்புக்கள்...


நெற்றியில் குங்குமம் வைக்கும் பெண்களை பார்ப்பது என்பது, தற்போது அறிதாகவே இருக்கிறது. இப்போது எல்லாம் ஸ்டிக்கர் பொட்டுதான்.

குங்குமம் வைப்பதன் மகிமை குறித்து தெரியாதவர்கள்தான், ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள். குங்குமம் வைத்துக் கொள்வதால் ஏற்படும் பலன்களை பார்ப்பதற்கு முன், குங்குமம் எப்படி தயாராகிறது என்பதை பார்ப்போம்.

படிகாரம், சுண்ணாம்பு, தண்ணீர், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்துதான் குங்குமம் செய்ய வேண்டும். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச்சத்தாக மாறிவிடும். படிகாரம், கிருமிநாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. தொற்று நோய் கிருமிகளும் நெருங்காது. மூளைக்கும், உடலின் பிற பகுதிகளுக்கும் செல்லும் நரம்புகளுக்கு நெற்றி வகிட்டில் குங்குமம் இடுவதால் சக்தி கிடைக்கிறது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக் கூடிய இடம் நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் சூடு தணிகிறது. இதனால் குங்குமம் இட்டுக்கொள்பவருக்கு புதிய சக்தி கிடைக்கிறது. குங்குமம் முறையாக தயாரித்திருந்தால்தான் இந்த பலன்களை அனுபவிக்க முடியும். கலப்படமான குங்குமத்தை இட்டுக்கொள்வதால் சில பிரச்சினைகள் வரலாம்.

ஆன்மிகத்தில் முக்கிய இடம் வகிக்கும் குங்குமம், அழகு சாதன பொருட்கள் வரிசையிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இரு புருவங்களுக்கு மத்தியில் நெற்றி வகிட்டில் குங்குமத்தை இட்ட பெண்களைப் பார்க்கும்போது லட்சுமிகரமாக தோன்றுவதைக் காணலாம். நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தால், தனிப்பலன் கிடைக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம். சூரியனின் கதிர்கள் நெற்றியில் இட்டுள்ள குங்குமத்தின் மீது படும்போது குங்குமத்துடன் சேர்க்கப்படும் படிகாரம், சுண்ணாம்பு, தண்ணீர், மஞ்சள் மற்றும் விட்டமின் டி அல்ட்ரா கதிர்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து காந்த சக்தியை உருவாக்குகின்றன.

No comments:

Post a Comment