எமிஸ் :
மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் ( 2019-2020 ) +2 பயின்ற மாணவ மாணவிகளுக்கு மாற்றுச்சான்றிதழ் ( Transfer certificate ) வழங்கியிருப்பீர்கள் என்பதால் , அம்மாணவர்களது விபரங்களை எமிஸ் இணையதளத்தில் students -- > students TC details . +2 பயின்ற மாணவர்களது பெயருக்கு எதிரே உள்ள யை கிளிக் செய்து , terminal class என்பதை தேர்வு செய்து , சார்ந்த மாணவனின் விபரத்தை common pool க்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. பிற வகுப்புகளிலும் மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு , மாற்றுச் சான்றிதழ் எமிஸ் தளத்தில் தயார் செய்தபின் , அம்மாணவரது விபரத்தையும் common pool ற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.
துவக்க நடுநிலை / உயர்நிலைப் பள்ளிகளிலும் தங்கள் பள்ளியில் இறுதி வகுப்பு பயின்ற மாணவர்களுக்கும் / பள்ளி மாறுதல் காரணமாக வேறு பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கும் மாற்று சான்றிதழ் தயார் செய்தபின் , அம்மாணவரது விபரத்தை common pool ற்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. இப்பணிகளை முடித்த பின்பே , தங்கள் பள்ளியில் பயிலும் பிற வகுப்பு மாணவர்களுக்கு எமிஸ் இணையதளத்தில் அடுத்த உயர் வகுப்பிற்கு தேர்ச்சி ( promotion ) வழங்கவும் , அதனைத்தொடர்ந்து புதிதாக சேர்க்கை செய்யப்படும் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்குமான பணிகளை மேற்கொள்ள இயலுமென அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. தேர்ச்சி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தேதி குறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
EMIS
» EMIS இணையதளத்தில் மாணவர்களது விபரங்களை பொது தொகுப்பிற்கு ( common pool ) அனுப்புதல் மற்றும் அடுத்த உயர் வகுப்பிற்கு தேர்ச்சி வழங்குதல் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் :






No comments:
Post a Comment