தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த இருவர், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தாண்டுக்கான, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களை, மத்திய கல்வி அமைச்சகம் நேற்று அறிவித்தது. இதில், நாடு முழுதும் இருந்து, 47 பேர், நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில், விழுப்புரம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலீப்; சென்னை, அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி ஆகியோர், நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி, காட்டேரிக்குப்பம், இந்திரா காந்தி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்வமுத்து குமரன் ராஜ்குமாரும், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Saturday, August 22, 2020
தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசு அறிவிப்பு
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment