THAMIZHKADAL TODAY NEWS

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஊட்டச்சத்து நிறைந்த ஜூஸ்!


ஆப்பிள், பீட்ரூட், கேரட், எலுமிச்சை பயன்படுத்தி தயாரிக்கும் ஜூஸ், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியமாகிறது. அதற்கு நீங்கள் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும். இயற்கையிலேயே கிடைக்கும் உணவுகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வகையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பயன்படுத்தி தயாரிக்கும் ஜூஸ் ஒன்றை இங்கே பார்ப்போம். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தரக் கூடியது.

தேவையான பொருட்கள்:

300 கிராம் பீட்ரூட்

300 கிராம் கேரட்

100 கிராம் ஆப்பிள்

அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு

உப்பு

ஐஸ் கட்டிகள்



செய்முறை:
பீட்ரூட், கேரட், ஆப்பிள் மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதனை நன்றாக அரைத்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த கலவையை நன்றாக கலக்கி வடிகட்டிக் கொள்ளவும்.
அதன்பிறகு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பரிமாறவும்.
இந்த ஜூஸ் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதில் ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த ஜூஸ் உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். பீட்ரூட், கேரட், ஆப்பிள், எலுமிச்சை என அனைத்துமே தனித்தனியாக பலவித மருத்துவ குணங்களை கொண்டவை. அவற்றை ஒன்றாக கலந்து தயாரித்த இந்த ஜூஸ் நிச்சயம் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும். அதனால் நீங்களும் கண்டிப்பாக முயற்சித்து பாருங்கள்.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel