Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 2, 2020

ஆன்லைன் கல்வி; தமிழக மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி



ஆன்லைன் கல்வி முறையில் இனி ஒரு உயிர் கூட போகாத அளவுக்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஸ்மார்ட்போன் இல்லை என்ற விரக்தியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.கோவையிலும் இதேபோன்ற சம்பவம் நடந்தது.

இதற்கிடையே ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையம் அருகே கொடிவேரி அணையில் இருந்து பாசனப் பகுதிகளுக்கு இன்று நீர் திறந்து விடப்பட்டது. அப்போது அணையின் ஷட்டரை உயர்த்தி, அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீரைத் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ''தமிழக அரசு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. இரண்டு இடங்களில் நடைபெற்ற மரணம் குறித்து அரசு ஆய்வு செய்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற தவறுகள் ஏற்படக் கூடாது.

தமிழ்நாட்டில் ஒரு குழந்தையின் உயிர் கூடப் போகாத அளவுக்கு நம் முதல்வர் அக்கறை எடுத்துக் கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் முழு பாதுகாப்பு அளிக்கப்படும்'' என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

No comments:

Post a Comment