Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 28, 2020

தமிழகத்தில் எந்தெந்த சமூகத்தினருக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது ?

தமிழகத்தை பொறுத்தவரை கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.

அதன்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு வழங்கப்படுகிறது. அதில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 

அதேசமயம், தங்களுக்கு உள் ஒதுக்கீடு தேவையில்லை என கிறிஸ்துவர்கள் அறிவித்துவிட்டனர். 

அடுத்ததாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 விழுக்காடும் வழங்கப்பட்டு வருகிறது. 

ஆதிதிராவிட வகுப்பினருக்கு 18 விழுக்காடு என்ற நிலையில், அதில் அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

பழங்குடியினருக்கு 1 விழுக்காடு என மொத்தமாக 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது. 

அருந்ததியினருக்கு போலவே, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக வலியுறுத்தி வருகிறது.

No comments:

Post a Comment