Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 16, 2020

எவ்வித நோய் நொடியும் இல்லாமல் நீண்ட ஆரோக்கியம் தரும் பிரண்டை


நம்மை சுற்றி வளரும் எத்தனையோ மூலிகைச் செடிகளைப் பெரும்பாலும் நாம் கண்டுகொள்வதில்லை. நம் முன்னோர்கள் எவ்வித நோய் நொடியும் இல்லாமல் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் அருகில் கிடைக்கும் மூலிகைச் செடிகளைப் பயன்படுத்தியது தான். அப்படிப்பட்ட ஒரு மூலிகைச்செடி தான் பிரண்டையின் ஆகும். தண்ணீர் வறட்சியான பகுதிகளிலும் வேலிகளின் ஓரத்திலும் இந்தப் பிரண்டை நன்றாக படர்ந்து வளர்ந்திருக்கும். பிரண்டையில் பல வகைகள் இருந்தாலும் நான்கு புற பட்டை வடிவில் இருக்கும் பிரண்டை தான் அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. பிரண்டை சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

பிரண்டையில் உள்ள சத்துக்கள் : .

பிரண்டையில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் முதலியன உள்ளன. மற்ற சத்துக்களை விட இதில் கால்சியம் மிகுதியாக உள்ளது. அதனால் கால்சியம் சத்துக் குறைபாடு உள்ளவர்கள் பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். பிரண்டையை துவையல், ரசம், கூட்டு, குழம்பு, வத்தல், சட்னி என எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். நகரப் பகுதியில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் பிரண்டை கிடைக்காது.

அதனால் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பிரண்டை பொடியை வாங்கியும் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment