Breaking

Tuesday, August 25, 2020

பொறியியல் கலந்தாய்வு - சான்றிதழ் பதிவேற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே அழைப்பு



தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொறியியல் படிப்பிற்கு கட்டணம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய 20-ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று ஆகஸ்ட் 24-ம் தேதி வரை அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதனையடுத்து இதுவரை 1,60,834 மாணவர்கள் கலந்தாய்விற்கு பதிவு செய்துள்ளனர்.

1,31,436 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்விற்கு கட்டணம் செலுத்தியுள்ளனர். 1,14,206 மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளனர். இவர்களுள் சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ள மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள் என்று தொடர்பாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment