Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 4, 2020

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள் நிற பழங்கள்..!


மஞ்சள் நிறமாக இருக்கும் பழங்களில் நிறைய எதிர்ப்பு சக்தி உள்ளது. நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டால் எதிர்ப்புப்பு சக்தி பெருகுமா...

பொதுவாக நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க காய்கறி பழங்களை அதிகம் உன்ன வேண்டும் என மருத்துவர்கள் கூறுவார்கள். இந்த வகையில் மஞ்சள் நிறமாக இருக்கும் பழங்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ பி சி ஈ ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன . ஒரு வாழைப்பழத்தில் 450 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. மேலும் வாழைப்பழத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது . எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

மாம்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் மயக்க வைக்கக்கூடிய கோடை காலத்து பழம்தான் மாம்பழம். இதன் சுவை நாக்கில் ஒட்டிக் கொள்ளும் அளவிற்கு இருக்கும். வைட்டமின் ஏ இதில் அதிகளவு உள்ளதால் சருமத்தின் பொலிவை கூட்டும்.

அன்னாசிப்பழம் நமது உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் அன்னாசி பழத்திற்கு அதிக அளவு பங்கு உண்டு. குறிப்பாக இந்த பழம் எலும்புகளுக்கு அதிக வலிமையை தரும். நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த பழம் சிறந்த மருந்தாகும். செரிமான பிரச்சனையை குணப்படுத்த உதவும்.

எலுமிச்சைப்பழம் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எல்லா பிரச்சனைக்கும் எலுமிச்சை சிறந்த மருந்தாக உள்ளது. இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் உடல் பருமன், அஜீரணம், நீர்ச்சத்து குறைபாடு , போன்றவற்றுக்கு உதவும். கிட்னியில் கற்கள் உருவாகாமல் இருப்பதையும் இது தடுக்கும்.

இந்த வகையான பழங்களை எல்லாம் ஜூஸ் போட்டு குடிப்பதைவிட அப்படியே உண்பது முழு பலனை தரும். எப்பொழுதும் ஜூஸ்களை தவிர்த்து பழங்களை பச்சையாக உண்ண பழக வேண்டும்.

No comments:

Post a Comment