Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 21, 2020

அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்


சென்னை: கொரோனா தாக்கம் குறைந்தபின், மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். எந்த காரணத்திற்காகவும் அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. கோடை விடுமுறை கடந்தும், பள்ளிகளின் விடுமுறை நீண்டுகொண்டே செல்கிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் சிகிச்சை மையமாகவும், தனிமைப்படுத்தும் மையமாகவும் சில பள்ளிகள் மாற்றப்பட்டு உள்ளன.

இதற்கிடையே மாணவர்களின் கற்றலில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அதுகுறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொலைக்காட்சிகள் மூலம் தற்போது வகுப்பு நடைபெறும் சூழலில் காலாண்டு தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் அளித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தாக்கம் குறைந்தபின், மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

10, பிளஸ் 1, பிளஸ் 2-வுக்கு அடுத்த மாதம் துணைத்தேர்வு! - தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு

அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் எதற்காக பணம் வசூலித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

10, 12 மட்டுமின்றி 8, 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் மறுதேர்வு எழுத வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment