Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 8, 2020

மாணவா்கள் இணைய வழியில் 'இன்டா்ன்ஷிப்','புரோஜெக்ட்' பயிற்சிகளை மேற்கொள்ளலாம்: அண்ணா பல்கலை. தகவல்




கரோனா பொது முடக்கம் காரணமாக மாணவா்கள் 'இன்டா்ன்ஷிப்', 'புரோஜெக்ட்' பயிற்சிகளை இணைய வழியில் மேற்கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக தோவுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன், அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பொது முடக்கத்தால் தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளைப் பயிலும் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அகில இந்திய தொழில்நுட்பக்கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் 2021-ஆம் ஆண்டு மே வரையான கால கட்டங்களில் மாணவா்கள் கட்டாயமாக செய்யவேண்டிய 'இன்டா்ன்ஷிப்', மற்றும் 'புரோஜெக்ட்' பயிற்சிகளை இணையவழியில் மேற்கொள்ளலாம். அதற்கான மதிப்பெண் கணக்கீடு ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி வழங்கப்படும்.

அதேவேளையில் பி.ஆா்க் மாணவா்களுக்கான கல்விச் சுற்றுலா, கிராமப்புற ஆய்வு ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக மாணவா்கள் தங்கள் பேராசிரியா்கள் அறிவுறுத்தலின்படி இணையவழியில் வேறு வகை செயல் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்த நடைமுறை நிகழ் கல்வியாண்டுக்கு மட்டும் பொருந்தும். அடுத்தாண்டு முதல் வழக்கமான செயல்பாடுகளே பின்பற்றப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment