JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

அல்சருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முட்டைகோஸ்.
இன்று வளர்ந்து வரும் நாகரீகம், நம்மை ஒரு இயந்திரமாக மாற்றி விடுகிறது. இதனால் நமக்கு சாப்பிடக் கூட நேரம் இல்லாமல், நமது வேலைகளை நோக்கி விரைந்து செல்கின்றோம். இதனால் நாம் உணவுகளின் மீது கவனம் செலுத்துவதில்லை. இதனால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இன்று வயிற்று புண் ஏற்படுகிறது.
வயிற்றுப்புண்

முட்டைகோஸில் வயிற்றுப்புண்ணை ஆற்ற கூடிய ஆற்றல் கொண்டது. இந்த முட்டைகோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம், நான்கு முறை குடித்து வந்தால் வயிற்று புண் குணமாகும். இதில் வயிற்றுப்புண்ணை குணப்படுத்தக் கூடிய குளுட்டமைல் உள்ளதால், வயிற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்கள் இதனை சாப்பிட்டால், குணம் பெறலாம்.
புற்றுநோய்

முட்டைகோஸில் புற்றுநோய் செல்களை அழிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. மேலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி

நமது உடலில் நோய் எதுவும் ஏற்படாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமான ஒன்று. முட்டைகோஸை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, நோய் அண்டாமல் நமது உடலை பாதுகாக்கலாம்.
No comments:
Post a Comment