அரசு பணிக்கான போட்டி தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்காக, புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: அரசு பணிகளுக்கு செல்ல போட்டி தேர்வு எழுத விரும்புவர்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் 'மெய்நிகர் கற்றல்' என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இதில், மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாட குறிப்புகள், வினா வங்கிகள், புத்தகங்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மத்திய, மாநில அரசு பணிகளுக்கு போட்டி தேர்வு எழுதுபவர்கள், இதற்கு, தங்களை தயார் செய்து கொள்ள, www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் உள்ள, tamilnaduucareerservices.tn.gov.in என்ற பகுதியில் தங்களது பெயரை கட்டணம் இல்லாமல் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், கோவிட் காரணமாக, தர்மபுரி வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், போட்டி தேர்வுக்கான இணைய வழி இலவச பயிற்சிகள் நடந்து வருகின்றன.
இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை நேரிலோ அல்லது, 04342 296188 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment