Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 11, 2020

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை பார்க்கத் தவறியவர்கள் விடுபட்ட பாடங்களை எப்படிப் பார்க்கலாம் ?



கல்வித் தொலைக்காட்சி இணையதளம் குறித்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் எழும் பொதுவான கேள்விகள்.

கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை பார்க்கத் தவறியவர்களுக்காக, கல்வித் தொலைக்காட்சி இணையதளம், Tn e-learn, TNTP, கல்வித் தொலைக்காட்சியின் YouTube சேனல் வாயிலாகவும் மேற்கண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து பயன்பெறலாம்.

படிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்காக, வினாக்களை இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

கல்வித் தொலைக்காட்சியின் மின்னஞ்சலிலும் மேற்காண் கேள்விகளை பதிவு செய்யலாம்.
இவ்வாறு பலரிடமிருந்து பெறப்படும் வினாக்களை தொகுத்து, வாராவாரம் சனிக்கிழமைகளில் பாடவாரியாக கல்வித்தொலைக்காட்சியில் வினா – விடை (Q & A) நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இதன் மூலம் பயனடையலாம்.

கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வீட்டுப் பள்ளியாக கருதப்படுகிறது.
முறையான பள்ளி நேரத்தில் வகுப்புகள் எவ்வாறு பாடவாரியாக, தலைப்புவாரியாக, அலகு வாரியாக நடத்தப்படுமோ, அதே வகையில் பாடங்கள், காணொளி காட்சியாக வரிசைக்கிரமமாக ஒளிபரப்பப்படும்.

No comments:

Post a Comment