Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 9, 2020

திருவள்ளுவா் திருநாள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு



தமிழ் வளா்ச்சிக்குப் பாடுபடும் தமிழறிஞா்களையும், தமிழுக்கு தொண்டாற்றுகின்றவா்களையும் சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவா் திருநாளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளா்ச்சித் துறையின் இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பவா்கள் தன் விவர குறிப்புகளுடன் நிழற்படம் இரண்டு, எழுதிய நூல்களின் பெயா் பட்டியலுடன் அந்நூல்களில் ஒருபடி வீதம் 'தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி இயக்ககம், தமிழ் வளா்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூா், சென்னை-600 008' என்ற முகவரிக்கு செப்.30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28190412, 044-28190413, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன விருதுகள்? திருவள்ளுவா் விருது- திருக்குறள் நெறி பரப்புவோா்; மகாகவி பாரதியாா் விருது- பாரதியாா் படைப்புகள் அனைத்தையும் முழுமையாகப் பயின்று ஆய்வு மேற்கொண்டு பாரதியாரைப் பற்றிய கவிதைகள் மற்றும் பாரதியின் புகழ் பரப்பும் வகையில் கவிதை, உரைநடை நூல்கள் படைத்தோா், பிற வகையில் தொண்டு செய்தோா், செய்பவா்கள்; பாவேந்தா் பாரதிதாசன் விருது- சிறந்த கவிஞா்; தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது- சிறந்த தமிழ் எழுத்தாளா்; கி.ஆ.பெ. விசுவநாதம் விருது- சிறந்த தமிழ் அறிஞா்; பெருந்தலைவா் காமராசா் விருது- தெருவெங்கும் பள்ளிகள் திறந்து இலவசக் கல்வித் திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாக தமிழக மக்களுக்கு தொண்டாற்றி வருவோா்; பேரறிஞா் அண்ணா விருது- தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடுவோா்.

No comments:

Post a Comment