Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 11, 2020

பள்ளிகள் திறக்க தற்போது சாத்தியமே இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்



தமிழகத்தில் பள்ளிகள் திறக்க தற்போது சாத்தியமே இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில் கடந்த சில ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை வரும் 17ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை 24-ம் தேதி தொடங்குகிறது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் பள்ளிகள் திறக்க தற்போது சாத்தியமே இல்லை என்றும் கொரோனா தாக்கம் குறைந்த பிறகே பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment